Wednesday, October 5, 2016

கல்வி உதவித்தொகை உயர்த்த கோரி புதுவை முதல்வரிடம் சென்டாக் பெற்றோர்கள் கோரிக்கை

க. எண் - 01/ 2016-17                                                                             05-10-2016

பெறுநர்:
முதலமைச்சர் அவர்கள்,
புதுச்சேரி அரசு
புதுச்சேரி-605 001.

ஐயா, வணக்கம்,

பொருள்:  சென்டாக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டி …

புதுச்சேரி மக்களுக்கு தாங்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் கல்வி செலவை மாநில அரசு ஏற்றுக் கொள்வது என்ற திட்டத்தினையும் தாங்கள் அறிமுகம் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதே போன்று மாநிலத்தில் நன்றாக பயின்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துபயிலும் பிறவகுப்பை சேர்ந்தவர்களுக்கும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் தற்போது உயத்தப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்த இயலாது மிகவும் சிறமப்படுகிறார்கள்.

குறிப்பாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 10 லட்சத்திற்குமேல் கட்டணமாகவும் பிற செலவுகள் என 11 லட்சத்திற்கு மேல் வசூலிக்கின்றனர். இதனால் இடம் கிடைத்தும் சிலர் சேராமல் விட்டு விட்டனர். அதே போல் தம் பிள்ளைகளுக்கு இடம் கிடைத்துவிட்டதே என்று பலர் கடன் வாங்கி கல்லூரிகளில் சேர்த்து மிகுந்த சிறமத்திற்குளாகி இருக்கிறார்கள் ;எனவே, தாழ்த்தப் பட்ட மக்க்ளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி அளித்தது போல எங்களுக்கும் உயர்த்தி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எனவே இந்த ஆண்டுமுதல் 75 சதிவீத கட்டணத்தை அரசு செலுத்தி உதவும் படி தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

சென்டாக் பெற்றோர் நலச் சங்கம்

1.   
2.
3.
4.